பருவநிலை: உலக நாடுகளை காக்க வைத்த அதிபர் டிரம்ப்

வா‌ஷிங்டன்: பருவநிலை உடன் பாட்டிலிருந்து விலகுவது குறித்து டோனல்ட் டிரம்ப் அடுத்த வாரம் முடிவு செய்யவிருக்கிறார். வா‌ஷிங்டன் வந்து சேர்ந்த அவர், பாரிஸ் உடன்பாடு பற்றி விரைவில் இறுதி முடிவு எடுக்கப் படும் என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார். சனிக்கிழமை சிசிலியில் நடை பெற்ற ‘ஜி7’ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற டோனல்ட் டிரம்ப், அமெ ரிக்காவின் நிலை குறித்து தெளிவு படுத்தவில்லை. முன்னதாக உடன்பாட்டிலிருந்து வெ ளி யே றி வி டு வ தா க வு ம் மிரட்டியிருந்த டிரம்ப், ஒரு கட்டத் தில் பருவநிலை உடன்பாட்டை ‘ஒரு கேலிக்கூத்து’ என்றும் வருணித்திருந்தார்.

இதற்கிடையே டிரம்ப்பின் முடிவுக்காக மற்ற ‘ஜி7’ உறுப்பு நாடுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் உருவான பாரிஸ் உடன்பாடு உலகின் முதல் பருவநிலை குறித்த விரிவான உடன்பாடாகும். இதன் மூலம் வெப்பநிலை அதி கரிப்பை 2 சென்டிகிரேடுக்குக் கீழே வைத்திருப்பது நோக்கம். இதற்காக உலக நாடுகள் தங் களுடைய நாட்டிலிருந்து வெளி யேறும் கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும். உடன்பாட்டை 55 நாடுகள் ஏற்றுக்கொண்டதால் நடை முறைக்கு வந்தது. இந்த 55 நாடுகளும் 55 விழுக்காடு கரிய மில வாயுவை வெளியேற்றி வரு கின்றன. 2016 செப்டம்பரில் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்த உடன்பாட்டில் கையெழுத் திட்டார்.

‘ஜி7’ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களில் சிலர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டஸ்க், ஜெர்மன் பிரதமர் மெர்க்கல், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மெக்ரன், ஜப்பானிய பிரதமர் அபே ஆகியோர் உள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளைக் காவல் காக்கும் மலேசியப் போலிசார். படம்: தி ஸ்டார் நாளிதழ்

21 Sep 2019

மலேசியாவில் பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியது

ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்ற போராட்டம். படம்: இபிஏ

21 Sep 2019

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகெங்கும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மலேசிய விமானப் படையைச் சேர்ந்த ஹெர்குலிஸ் சி-130 விமானத்தில் செயற்கை மழை உண்டாக்குவதற்குத் தேவையான உப்புக்கலவைகள் நிரம்பிய கலன்கள் ஏற்றப்படுகின்றன. சரவாக்கில் காற்று அபாயகரமான நிலையை எட்டியது நேற்று பிற்பகல் 2 மணிக்கு 412 ஆக இருந்து இரவு 8 மணிக்கு 404 என சற்றே குறைந்தது. படம்: பெர்னாமா

21 Sep 2019

சரவாக்கில் அபாயகரமான நிலையை எட்டிய புகைமூட்டம்; செயற்கை மழைக்கு முயற்சி