சுடச் சுடச் செய்திகள்

பட்டம், ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட தற்காலிகத் தடை

சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பிட்ட தினங்களில் பட்டம், பலூன்கள் அல்லது ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட அனுமதி வழங்கப்படாது. இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை முன்னிட்டு ஒத்திகையில் ஈடுபடவுள்ள விமானங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் தேசிய தின அணிவகுப்பு 2017 ஏற்பாட்டுக் குழுவும் நேற்று தெரிவித்தன. மரினா பே மிதக்கும் மேடையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்தக் கட்டுப்பாடு நடப்புக்கு வருகிறது. தேசிய தின அணிவகுப்பு 2017 ஒத்திகைகள், முன்னோட்டக் காட்சிகள், ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பு உட்பட நிகழ்ச்சி நேரங்களில் இந்தக் கட்டுப்பாடு நடப்பில் இருக்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon