சுடச் சுடச் செய்திகள்

மூன்று வாரங்களில் வடகொரியாவின் மூன்றாவது ஏவுகணை

வடகொரியா நேற்றும் ஓர் ஏவு கணைச் சோதனையை நடத்தி வழக்கம்போல அனைத்துலக நாடு களின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. குறைந்த தூரம் கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணையைச் செலுத்தியதன் மூலம் மூன்று வாரங்களில் மூன்றாவது ஏவுகணையை அது சோதித்துள் ளது. மேலும், இதுவரை ஒன்பது ஏவுகணைச் சோதனைகளை வட கொரியா நடத்தி உள்ளதாக பிபிசி தெரிவிக்கிறது. ‘ஸ்கூட்’ வகை யைச் சேர்ந்த அந்த ஏவுகணை 450 கிலோ மீட்டர் தூரம் (சுமார் 280 மைல்) பாய்ந்து சென்று ஜப்பானிய கடல் நீரில் விழுந்தது.

வடகொரியாவின் வோன்சான் என்னும் பகுதியிலிருந்து ஏவப் பட்ட அந்த ஏவுகணை சுமார் ஆறு நிமிடங்கள் பறந்ததாக அமெரிக் காவின் பசிபிக் தளபத்தியம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் கொதித்து எழுந்து கடும் கண் டனத்தை தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அத்துமீறலை இனி யும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஜப்பானியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துமாறு ஐநா மன்றம் பலமுறை வலியுறுத்தியும் அதனை காதில் போட்டுக்கொள்ளாத வடகொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணையைச் செலுத்தி சோதிப்பதில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, அண்மைய மாதங்களில் அது அதிக ஏவுகணைச் சோதனை களை நடத்தியுள்ளது. அண்மையில் நடந்த ஜி7 நாடு களின் தலைவர்கள் கூட்டத்தில் வடகொரிய விவகாரமே அனைத் துலக அளவில் முன்னுரிமை கொடுத்து கவனிக்கப்பட வேண் டியது என ஒப்புக்கொள்ளப்பட்ட தாக ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon