‘மோரா’ புயலால் பாதிப்பு இராது

சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ‘மோரா’ புயல் பங்ளாதேஷை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்குப் பாதிப்பு இருக்காது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாறியதால் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்தது. இதையடுத்து, தூத்துக்குடி உள்ளிட்ட சில துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Loading...
Load next