பிலிப்பீன்ஸ் ராணுவம்: மராவி நகரைக் கைப்பற்றிவிட்டோம்

மணிலா: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு போராளிகளிடமிருந்து மராவி நகரைக் கைப்பற்றிவிட்டோம் என்று பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. பிலிப்பீன்சின் தெற்கு நகரமான மராவியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 100க்கும் மேற்பட்டோர் மாண்டனர். 60,000க்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறினர். மணிலா தொலைக்காட்சியில் பேசிய ராணுவ பிரிகேடியர் ஜென ரல் ரெஸ்டிடுடோ பாடில்லா “சண் டை முடிவுக்கு வந்து விட்டதாக எங்களுடைய தளபதிகள் தெரிவித் துள்ளனர்,” என்றார்.

“போராளிகளின் வசமுள்ள சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர மராவி நகரம் தற்போது அர சாங்கத் துருப்புகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. “தேவை ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட இடங்களில் அதிரடி விமானத் தாக்குதல் நடத்தப்படும்,” என்றார் அவர். இதுவரை மராவி சண்டையில் பொதுமக்களில் 19 பேர் மாண் டனர். 18 வீரர்களும் 61 போராளி களும் மாண்டனர் என்று அதிபர் மாளிகை பேச்சாளர் எர்னெஸ்டோ அபெல்லா தெரிவித்தார். சுமார் 200,000 மக்கள் தொகை கொண்ட மராவி நகரிலிருந்து 400க்கும் மேற்பட்ட குடியிருப் பாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Loading...
Load next