பிரிட்டனின் வேவுத்துறையில் உள்விசாரணை ஆரம்பம்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் தற் கொலைத் தாக்குதலுக்குப் பிறகு முக்கிய தடயங்களை ‘எம்15’ என்ற பிரிட்டனின் வேவுத்துறை தவறவிட்டுவிட்டது என்று குறை கூறப்படுகிறது. இதனால் வேவுத்துறையில் உள்விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. லிபியாவைப் பூர் விகமாகக் கொண்ட பல்கலைக் கழக படிப்பைப் பாதியில் கைவிட்ட பிரிட்டனில் பிறந்த 22 வயது சல்மான் அபிடி இசை அரங்கத்தில் தன்னைத் தானே வெடிக்கச் செய்து நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். திங்கட்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்குப் பிறகு மான்செஸ்டரிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரை யோர நகரில் 23 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து மொத்தம் 14 பேர் பிரிட்டிஷ் மண்ணில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயத் தில் லிபியாவில் அபிடியின் தந்தை யும் சகோதரரும் கைது செய்யப் பட்டனர். தாக்குதல் நடத்துவதற்கு முன்பே தற்கொலையாளி சல்மான் அபிடி ஆபத்தானவராக விளங்கு கிறார் என்று பொதுமக்களிட மிருந்து வேவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்