மெஸ்ஸிக்கு தங்கக் காலணி

பார்சிலோனா: உலகின் முன்னணி காற்பந்து வீரரான அர்ஜெண்டினா வின் லயனல் மெஸ்ஸி நான்காம் முறையாக ஐரோப்பாவின் ‘தங்கக் காலணி’ விருதை வென்றுள்ளார். இதன்மூலம், தங்கக் காலணி விருதை அதிக முறை வென்ற சாதனையை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வுடன் அவர் பகிர்ந்துகொண்டார். தங்கக் காலணி விருதுக்கான புள்ளிப் பட்டியலில் மெஸ்ஸி 74 புள்ளிகளுடன் முதலிடம் பிடித் தார். 50 புள்ளிகளை மட்டும் பெற்ற ரொனால்டோவால் பத்தாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. ஸ்பானிய லா லீகாவில் பார்சிலோனா குழுவிற்காக விளை யாடி வரும் மெஸ்ஸி 2016=17 லீக்கில் 37 கோல்களை அடித்தார். இந்தப் பருவத்தில் லா லீகா பட்டமும் சாம்பியன்ஸ் லீக் கிண்ணமும் பார்சிலோனாவின் கையைவிட்டு நழுவின. இருந்தாலும், கடந்த சனிக் கிழமை பின்னிரவில் நடந்த போட்டியில் பார்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் ஆலவெஸ் குழுவை வீழ்த்தி, ஸ்பானிய அரசர் கிண்ணத்தைக் கைப்பற்றி ஆறுதல் பெற மெஸ்ஸி பெரும் துணையாக இருந்தார். அந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மெஸ்ஸி அற்புதமான ஒரு கோலைப் போட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon