சுடச் சுடச் செய்திகள்

25 ஆண்டுகளுக்குப் பின் கண்ணீருடன் விடைபெற்றார்

இத்தாலியின் முன்னணி காற்பந்துக் குழுக்களில் ஒன்றான ‘ஏஎஸ் ரோமா’விற்காக கடந்த 1992ஆம் ஆண்டில் அறிமுகமானார் ஃபிரான்சிஸ்கோ டோட்டி. அப்போது முதல் இதுநாள் வரை வேறு எந்தக் குழுவிற்கும் தாவாமல் அந்தக் குழுவிற்காகவே 25 ஆண்டுகளாக விளையாடி வந்த டோட்டி, நேற்று முன்தினம் கெனோவா குழுவிற்கெதிரான மோதலுடன் காற்பந்தில் இருந்து விடைபெற்றார். ரோமாவிற்காக மொத்தம் 619 போட்டிகளில் விளையாடிய இவர் 250 கோல்களை அடித்துள்ளார். அத்துடன், 58 அனைத்துலக ஆட்டங்களில் பங்கேற்று, ஒன்பது கோல்களையும் புகுத்தியுள்ளார். 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இத்தாலி குழுவிலும் இவர் அங்கம் வகித்தார். “ஓய்வுபெற்றுவிட்டாலும் எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்ல நான் தயாராக இல்லை,” என்று கண்களில் நீர் ததும்பச் சொன்னார் டோட்டி. படம்: ராய்ட்டர்ஸ்

ஃபிரான்சிஸ்கோ டோட்டி. படம்: ராய்ட்டர்ஸ்