விவசாயிகளின் அடிமடியில் கைவைக்கும் மத்திய அரசு: குஷ்பு

சென்னை: மாட்டிறைச்சித் தடைக்குத் தமிழகத்தில் ஒட்டு மொத்த கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ள தாக காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு மீதான பயம் காரணமாக இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் பழனி சாமி கருத்து ஏதும் சொல்ல வில்லை என்று அவர் விமர் சித்துள்ளார். தமிழக ஆட்சியாளர்கள் முத லில் மக்கள் பிரச்சினையைக் கவ னிக்க வேண்டுமென வலியுறுத்தி யுள்ள குஷ்பு, அதன் பின்னர் தங்கள் கட்சிப் பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்ளட்டும் எனக் கூறியுள்ளார். “தனக்குப் பயன்படாத மாட்டை அல்லது ஏதோ தேவைக்காக சாதாரண விவசாயி தனது மாட்டை விற்று சில ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறான். எப்படிச் சுற்றி வந்தாலும் அந்த விவசாயிகள் மடியில்தானே கை வைக்கிறீர்கள்?

“இந்தியாவிலேயே தமிழகத் தில் இருந்துதான் 40 சதவீத தோல் ஏற்றுமதி நடக்கிறது. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப் போகிறார்?” என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பாரதிய ஜனதா ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது எனப் புள்ளிவிவரங்களைப் பட்டி யலிட்டார். “செடி, கொடிகளுக்கும் உயிர் உண்டு.

அப்படியானால் காய்கறி, பழங்களையும் சாப்பிடக்கூடாது என்பார்களா? சுவாசிக்கும் காற் றில்கூட உயிரினங்கள் இருக் கின்றன. அவை வதைபடும் என்ப தற்காக சுவாசிக்கக்கூடாது என்பார்களா? “இவ்வளவு பேசும் பாஜகவினர் தோல் பொருட்களைப் பயன் படுத்துவதை முதலில் கைவிட வேண்டும். தோல் பைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண் டும். காலில் செருப்பு அணியாமல் நடமாடத் தயாரா? இடுப்புப் பட்டை கட்டுபவர்கள் இனிமேல் அதை அணியமாட்டேன், நாடா கயிறுதான் கட்டுவேன் என்று சொல்லத் தயாரா?” என்றும் குஷ்பு பல்வேறு கேள்விகளை அடுக்கியுள்ளார். மத்திய அரசை எதிர்த்தால் தங்களுக்குரிய ஆதரவு கிடைக் காமல் போய் விடுமோ? என தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சு வதாகவும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon