மருத்துவப் பலன்களை விவரித்து பழரசம் விற்கும் முதியவர்

சென்னை: புறநகர்ப் பகுதியில் தள்ளுவண்டியில் இயங்கும் பழரச விற்பனையகத்தில் பழங்களின் மருத்துவக் குணங்களையும் அத னால் விளையக்கூடிய நன்மை களையும் எடுத்துக் கூறி பழரசம் விற்று வருகிறார் முதியவர் ஒருவர். அங்கு தினமும் ஏராளமானோர் பழரசம் வாங்கிப் பருகி, பலன் அடைந்து வருகிறார்கள். குறைந்த விலையில் சுத்தமான, தரமான பழ ரசம் கிடைப்பதாகப் பொதுமக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த போதிலும் வெப்பத்தின் தாக்கம் என்னவோ குறைய வில்லை. இதனால் சென்னை, வேலூர், திருச்சி உட்பட பல்வேறு நகரங் களில் வெயில் காலத்துக்கு ஏற்ற பழங்கள், பழரசங்கள், இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக உள்ளது.

இந்நிலையில்ம் சென்னை புறநகர்ப் பகுதியில் தனது தள்ளு வண்டியில் வைத்து, பழங்கள் விற்று வருகிறார் முதியவர் ஒரு வர். மேலும், அங்கேயே வாடிக்கை யாளர்களுக்குப் பழரசங்களும் தயாரித்து தருகிறார். தர்பூசணி, கிர்ணி, முலாம் பழங்களை அதிகளவில் விற்பனை செய்யும் அவர், அவற்றை உட் கொள்வதால் ஏற்படக்கூடிய மருத்துவப் பலன்களையும் எடுத் துக் கூறுகிறார். பழங்களின் மருத்துவக் குணங்களைத் தெரிவிக்கும் துணிப் பதாகை ஒன்று அவரது தள்ளுவண்டியின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து ஆச்சரியப் படும் வாடிக்கையாளர்கள், தங்க ளுக்குப் பிடித்தமான பழரசத்தை தேர்வு செய்கிறார்கள். முதியவரின் தள்ளுவண்டிக் கடையில் பழரசம் அருந்தும் வாடிக்கையாளர்கள். படம்: சதீஷ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon