சுடச் சுடச் செய்திகள்

மாட்டிறைச்சித் தடைக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது பற்றி பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “உணவுப் பழக்கம் குறித்து எங்களுக்கு யாரும் கற்றுத்தரத் தேவையில்லை. கேரள மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கம் கொண்டவர்கள். “எங்களது உணவுமுறை ஆரோக்கியமானது மட்டுமல்ல சத்தானதும்கூட. அதை யாரா-லும் மாற்ற முடியாது. “எங்கள் மக்கள் தங்களது விருப்பப்படி உண்பதற்கு கேரள அரசு முழு ஆதரவையும் அளிக் கும்,” என்றார்.

இந்நிலையில், கேரளாவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கேரளா முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டிறைச்சி விருந்து நடத்தியுள்ளனர். இதேபோல் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாட்டிறைச்சி விருந்து நடத்தினர். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கம் இதற்கிடையே, கேரளாவின் கன்னூர் பகுதியில் பொது இடத் தில் வைத்து மாட்டை வெட்டி கொன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தனது கட்சியினரின் இச் செயலுக்குக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon