நாயகி வேடம்: நமீதா மகிழ்ச்சி

நமீதா திடீரென உடல் இளைத்து, கட்டுக் கோப்பான உடல்வாகுடன் வலம் வருவது கோடம்பாக்க புள்ளிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. எனினும் அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமைய வில்லை. ‘பொட்டு’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, தற்போது அவருக் குப் புதிய வாய்ப்புகள் கிடைத் துள்ளன. அதுமட்டுமல்ல, நீண்ட இடைவெளிக்குப் பின் னர் மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறாராம். அப்படியா சேதி? என்று விசாரித்தால், வாயெல்லாம் பல்லாக நமீதாவின் சிரிப்பு கிறங்க டிக்கிறது. ‘மியா’ என்ற பெயரில் மேத்யூ ஸ்கேரியா, ஆர்.எல்.ரவி ஆகிய இருவ ரும் இணைந்து, கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படத்தில் தமக்கு சவாலான வேடம் அமைந்துள்ளதாக பூரிப்புடன் சொல்கிறார் நமீ. இந்த இரட்டை இயக்குநர் கள் மலையாளத்தில் ‘ஸ்பீடு’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்கள்.

மேலும், ‘மியா’வில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திகில் கதையைக் கையாளும் இப்படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. “இந்தப் படம் வழக்கமான பேய், திகில் படங்களைப் போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன், மனைவி பந்தத்தில் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கதை. “கதாநாயகியான நான் என் கணவருக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்வதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் எனக்கு என்ன நேர்ந்தது? நான் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறேன்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் கூறியுள்ளனர். ‘மியா’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கி உள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் தொழில்நுட்பப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அநேகமாக ஜூன் இறுதிக்குள் இப்படம் வெளியாகுமாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon