சுடச் சுடச் செய்திகள்

ஜோதிகா நடித்துள்ள படத்தில் ஒரு பாடலைப் பாடிய கார்த்தி

தனது அண்ணியும் நடிகையுமான ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட் டும்’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் நடிகர் கார்த்தி. ஜிப்ரான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ‘அடி வாடி திமிரா புலியோட்டும் மொறமா’ என்கிற உமாதேவியின் வரிகளை கோல்டு தேவராஜ் பாடி இருக்கிறார். இயக்குநர் பிரம்மா எழுதிய ‘கருகருன்னு சுருட்டமுடி வளத்தி ருந்தாண்டி கரண்டுக்கம்பி’ பாடலை தேவராஜ், பானுப்ரியா, நமீதாபாபு பாடியிருக்கிறார்கள். இந்நிலையில், விவேக் எழுதியுள்ள ‘குபு குபு’ என்ற பாடலை ரொம்ப இயல்பாகப் பாடியிருக்கிறாராம் கார்த்தி. ஏற்கெனவே ‘பருத்தி வீரன்’, ‘பிரியாணி’ படங்களில் ஒருசில பாடல் வரிகளைப் பாடிய அனுபவம் இவருக்கு உண்டு. இதுவோ முழு நீளப் பாடலாம். பாடல் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டிய இப்படத்தின் தயாரிப்பாள ரும் கார்த்தியின் அண்ணனுமான சூர்யா, தம்பிக்கு உரிய சம்பளத் தையும் அளித்து அசத்தி உள்ளார். ஜிப்ரானோ, பாடல் ராயல்டிக்கான பத்திரத்தைக் கொடுத்து ஆச்சரியப் பட வைத்தாராம். ‘மகளிர் மட்டும்’ அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறார் சூர்யா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon