ஆசிரமம் நடத்துவதே என் எதிர்காலத் திட்டம்: தன்‌ஷிகா

“சினிமாவுக்காக படிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டேன். இப்போது சினிமாவில் மட்டுமே முழுக் கவனமும் குவிந்துள்ளது. எப்போதுமே கொடுத்த வேலையை சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்பது எனது கொள்கை. அதை தொடர்ந்து, உறுதியாகக் கடைபிடிக்கிறேன். மற்ற நடிகைகளைப் போலவே தமக்கு யாரிடமும் காதல் இல்லை, திருமணம் குறித்து இன்னும் யோசிக்கவே இல்லை என்றுதான் தன்‌ஷிகாவும் சொல்கிறார். அதேசமயம், அவர் கூறும் சில விவரங்கள் உண்மையானவை. அவை, இந்த இளம் நாயகி மீதான மரியாதையை, மதிப்பை அதிகப்படுத்துகிறது. திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஆதர வற்றவர்களுக்காக ஓர் இல்லத்தை வழிநடத்த வேண்டும் என்பதே சாய் தன்‌ஷிகாவின் லட்சியமாக உள்ளது. “உலகில் எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஓர் ஆசிரமம் திறக்க வேண்டும். இதுவே என எதிர்காலத் திட்டம்,” என்கிறார்.