சுடச் சுடச் செய்திகள்

சுகாதாரப் பராமரிப்பில் இயந்திர மனிதர்கள் உதவி

வீட்டிலிருந்தபடியே கவனித்துக்கொள்ளப்படும் நோயாளிகள் எதிர்காலத்தில் தங்களது சுகா தாரப் பராமரிப்பிற்காக இயந்திர மனிதர்களை உதவிக்கு வைத்து இருப்பர். அத்தகைய இயந்திர மனிதர்களின் உதவி முதலில் மருத்துவமனைகளில் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று நடந்த தேசிய சுகாதார தகவல் தொழில்நுட்ப உச்சநிலை மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “மருத்துவமனைகளிலிருந்து சமூகத்தை நோக்கிய மாற்றத்தின் தொடர்ச்சியாக, இயந்திர மனிதர்களின் துணையுடன் வீட்டிலேயே நோயாளிகளைக் கவனித்துக் கொள்வது குறித்து ஆராயவுள்ளோம்,” என்று திரு கான் தெரி வித்தார்.

2014ஆம் ஆண்டில் தொடங் கப்பட்ட சுகாதாரத் தகவல் தொழில்நுட்பப் பெருந்திட்டம் 2021ஆம் ஆண்டில் நிறைவுபெறும். அதன்பிறகு, நோயாளிகள், மருத்துவர்கள், சுகாதாரப் பரா மரிப்பு சேவை வழங்வோர் ஆகிய அனைவரும் ஒரு மிகப் பெரிய தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருப்பர். அது மட்டுமின்றி, ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்களுடைய சுகாதார ஆவணங்களைத் தங்களது கைபேசிகள் அல்லது கணினி வழியாகக் காண முடியும்.

அந்த ஆவணங்கள் மூலம் நோயாளி ஒருவரைப் பற்றிய மருத்துவக் குறிப்புகளையும் கடந்த காலங்களில் அவர் பெற்ற சிகிச்சைகளையும் மருத்துவர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய திட்டங்களால், மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சுகாதாரப் பாரமரிப்பு அமைப்பைக் கொண்ட உலக நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உருவெடுக்கும். இதனால், இப்போதிருப்பதைவிட சிறந்த, விரைந்த, மலிவான, அதிக சௌகரியமான சுகாதாரப் பராமரிப்பு சேவை சிங்கப்பூரர்களுக்குக் கிட்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon