சுற்றுலாப் பயணிக்கு பத்து நாள் சிறை

சிங்கப்பூருக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு, டாக்சி ஓட்டு நரைத் தாக்கியதற்காக பத்து நாள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் மெக்சிகோ நாட் டைச் சேர்ந்த ஜோனத்தன் கன்சா லெஸ், வயது 35, டாக்சி ஓட்டு நரின் கன்னத்தில் அறைந்து மார் பில் கைவைத்துத் தள்ளியதை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று அதிகாலை 3.00 மணி அளவில் நெய்ல் ரோட்டில் திரு கன்சாலெசும் அவரது மனைவியும் டாக்சி ஒன்றில் ஏறி வெஸ்டின் ஹோட் டலுக்குச் செல்லுமாறு கூறினர்.

ஆனால் இடத்தின் பெயரை தவறாகப் புரிந்துகொண்ட டாக்சி ஓட்டுநர் லீ இங் குவான், வெஸ்டின் ஸ்டாம்ஃபோர்ட் என்று முன்பு அழைக்கப்பட்ட ஸ்டாம்ஃ போர்ட் ரோட்டில் உள்ள ‘சுவிஸ்ஹோட்டல் த ஸ்டாம்போர்ட்’ ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். இதனால் கைபேசி செயலி யைப் பயன்படுத்தி செல்ல வேண் டிய இடத்திற்கு கன்சாலெசின் மனைவி வழிகாட்டினார்.

Loading...
Load next