அண்டை வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு செய்த மாது கைது

யீ‌ஷூன் வட்டாரத்தில் தனது அண்டை வீட்டுக்காரர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக தொந்தரவு கொடுத்து வந்த மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த 63 வயது மாதுவின் தொந்தரவைப் பொறுக்க முடி யாமல் பாதிக்கப்பட்ட அண்டை வீட்டுக்காரர் ஒருவர் வீட்டுக்கு வெளியே பொது நடைபாதையில் பலகையைக் கொண்டு தடுப்புச் சுவரை எழுப்பினர். இந்த சம்பவங்கள் தொடர்பில் புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாது பொது மக்களுக்குத் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காகக் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தெரித்தது.

அந்த மாது எண்ணெய் போன்ற திரவத்தைத் தங்கள் வீடுகளுக்கு எதிரே பொது நடை பாதையில் கொட்டுவார் என்றும் அது சிறுநீர் வாசனை அடிக்கும் என்றும் அண்டைவீட்டுக்காரர்கள் கூறினர். பயன்படுத்தப்பட்ட கழி வறை திசுத்தாளையும், ‘சேனிட்டரி பேட்ஸ்’களையும் தங்கள் வீடுகளுக்கு எதிரே அந்த மாது போடுவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அந்த மாது திங்கள் மாலை முதல் தனது வீட்டில் சத்தம் எழுப்பியதாகவும் அண்டை வீட்டார்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினர். அந்த மாதுவுடன் அவரது மகள் வசிக்கிறார் என்றும் அவரும் தமது தாயைப் போலவே செயல் படுவார் என்றும் அறியப்படுகிறது. மேலும், மாதுக்கு ஒரு மகன் உள்ளதாகவும் ஆனால் அவர் அந்த மாதுவுடன் வசிப்பதில்லை என்றும் கூறப்படு கிறது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon