சுடச் சுடச் செய்திகள்

பெரியவர்களுக்கும் ஆதரவு தேவைப்படுகிறது - டெனிஸ் புவா

சிறப்புத் தேவைகளுள்ளவர்களுக் கான ஆதரவும் சேவைகளும் கடந்த 10 ஆண்டுகளில் சிறார் கள், பதின்ம வயதினரை நோக்க மாகக் கொண்டே அமைந்துள்ளது. ஆனால் சிறப்புத் தேவை களுள்ள பெரியவர்களுக்கும் ஆதரவு தேவை என்று ஆட்டிஸம் வள மையத்தின் தலைவரான திருவாட்டி டெனிஸ் புவா தெரி வித்துள்ளார். ஆட்டிஸம் மாநாட்டில் பேசிய ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி புவா, “கடந்த 10 ஆண்டுகளில் இளையர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. “ஆனால் 18 அல்லது 21 வயதை அடைந்தவுடன் கற்றல் நின்றுவிடுவதில்லை,” என்றார் அவர்.

“சுயமாக வாழ்வது உட்பட தர மான வாழ்க்கையை உறுதிசெய்ய, சிறப்புத் தேவைகளுள்ள பெரியவர் களுக்கு அன்றாட வாழ்விலும் வேலைத் திறனிலும் வாழ்நாள் பயிற்சியும் ஆதரவும் தேவைப்படு கிறது,” என்று அவர் தெரிவித் தார். சிறப்புத் தேவையுள்ளோருக் கான பாத்லைட் பள்ளி, ஏடன் பள்ளி ஆகியவற்றின் மேற்பார்வை யாளருமான திருவாட்டி புவா, ஆட்டிஸம் பிரச்சினையுள்ள ஒவ் வொருவரின் திறனையும் முழு மையாக வெளிப்படுத்தச் செய்ய குடும்பங்கள், நிபுணர்கள், அர சாங்கம், சமூகம் ஆகியவற்றுக்கு இடையே குழு முயற்சி தேவைப் படுகிறது என்றார். சிறப்புத் தேவைகளுள்ள சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிங்கப்பூர் மற்ற நாடுகளின் சிறந்த செயல்முறைகளைப் பின் பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.