குறைவான ஊழியர்களே சம்பள உயர்வு பெற்றனர்

சிங்கப்பூரின் தனியார் துறை ஊழியர்களுக்கு 2016ஆம் ஆண்டு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த ஆண்டில் சம்பள உயர்வு பெற்ற ஊழியர்களின் எண் ணிக்கை குறைவாகவே இருந்தது. மனிதவள அமைச்சு, நிறுவனங் களின் சம்பள முறை பற்றி மேற் கொண்ட ஆய்வில் இந்த விவ ரங்கள் தெரிய வந்துள்ளன. முதலாளிகளின் மத்திய சேம நிதி பங்கு உட்பட மொத்த சம்பள உயர்வும் மிதமான அளவிலேயே இருந்தது. இது, 2015ல் 4.9 விழுக் காட்டிலிருந்து 2016ல் 3.1 விழுக் காட்டுக்குக் குறைந்தது.

நேற்று வெளியிடப்பட்ட அறிக் கையில் மொத்த சம்பள உயர்வு பெற்ற ஊழியர்களின் விகிதமும் 77 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காட்டுக்குக் குறைந்து விட்டது என்று அமைச்சு குறிப் பிட்டது. இதே ஆண்டில் போனசும் இதே வகையில் மிதமாக இருந்தது என்று அமைச்சு மேலும் தெரி வித்தது. லாபகரமாக செயல்படும் நிறு வனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்துவந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சந்தேகப்பேர்வழி ஒருவர் தன்னை அவரது சகோதரி என்று கூறி மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சனிக்கிழமை இரவு தன் ஃபேஸ்புக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் பகிர்ந்துகொண்டார். படம்: சாவ் பாவ்

23 Jul 2019

இல்லாத சகோதரர் பெயரில் மோசடி; டின் பெய் லிங் எச்சரிக்கை