தெம்பனிஸ் புளோக்கில் இறந்துகிடந்த இருவர்

தெம்பனிஸ் சென்ட்ரல், புளோக் 520Aல் நேற்று முன்தினம் இரவு ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் இறந்துகிடந்தனர். புளோக்கின் காலியிடத்தில் 49 வயது ஆடவர் அசைவற்றுக் கிடந் தார். இதே புளோக்கின் 10வது மாடியில் 46 வயது பெண் ஒரு வரும் இறந்துகிடந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர். திங்கட்கிழமை இரவு 10.58 மணியளவில் தகவல் கிடைத்த தைத் தொடர்ந்து போலிசார் அங்கு விரைந்தனர். அப்போது இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இருவருக்கும் திருமணமாக வில்லை என்று நம்பப்படுகிறது. இயற்கைக்கு மாறான இரு வரின் மரணம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

புளோக் 520A அருகே 49 வயது ஆடவர் இறந்துகிடந்த இடத்தை ஆராய்ந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை