அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனையுடன் பிணை

புதுடெல்லி: அயோத்தியில் அமைந் திருந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி கரசேவை நடத்தி தகர்க்கப்பட்டது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கு பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதும் மற் றொன்று பாபர் மசூதி இடிப் புக்கான குற்றச்சதியில் ஈடு பட்டதாக அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப் பட்டன. இதில் முதல் வழக்கு விசாரணை லக்னோ தனி நீதிமன்றத்திலும் 2வது வழக்கு ரேபரேலி நீதிமன்றத்திலும் நடை பெற்று வந்தது.

இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சதி வழக்கில் இருந்து பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோ‌ஷி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி நீதிமன்றம் 2001ஆம் ஆண்டு விடுவித்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு உறுதிசெய்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய் யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. லக்னோ, ரேபரேலி ஆகிய இரு சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்கை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோ‌ஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி நேற்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோ‌ஷி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் முன்னிலை யாகினர். பின்னர், அத்வானி உள்ளிட்டோர் பிணை கோரிய மனுவை ஏற்றுக்கொண்ட லக்னோ நீதிமன்றம் 12 பேருக்கும் சொந்த பிணைத்தொகையுடன் நிபந்தனை யுடன் கூடிய பிணை வழங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!