இங்கிலாந்து தோல்வி

லண்டன்: மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கி லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இத்தோல்வியில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டோம் என்று கூறினார் இங்கிலாந்தின் அணித் தலைவர் மோர்கன். முதலில் பந்தடித்த இங்கி லாந்து அணி, தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் அபார பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியா மல் 31.3 ஓவர்களில் 153 ஓட்டங் களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.

பேர்ஸ்டோ, ஜோன்ஸ், டேவிட் வில்லே ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் நடையைக் கட்டி னார்கள். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டு களையும் பார்னல், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த் தினார்கள். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 28.5 ஓவர் களில் 3 விக்கெட்டுகள் இழப் பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் ஏற்கெனவே 2 வெற் றிகளைப் பெற்ற இங்கிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றி யது.

இப்போட்டியில் தென்னாப் பிரிக்கா வீரர் ஹாசிம் அம்லா 23 ஓட்டங்களை எடுத்தபோது அதி வேகமாக 7 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெரு மையைப் பெற்றுள்ளார். ஹாசிம் அம்லா 153 போட்டி களில் 152 இன்னிங்சில் 7 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!