உட்ஸ்: மது அருந்தவில்லை, மருந்தே காரணம்

நியூயார்க்: மது அருந்தியதாகக் கைது செய்யப்பட்ட பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் (படம்) தான் உட்கொண்ட மருந்து களால் ஏற்பட்ட கோளாறே இப் பிரச்சினைக்குக் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் மது அருந்திவிட்டு காரை ஓட்டிச் சென்றதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனையடுத்து போலிசார் அவரைக் கைது செய் தனர். ஆனால், சட்டரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக அவர் உறுதியளித்ததையடுத்து போலிசார் அவரை விடுவித்தனர். இது தொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் பேச மறுத்து விட்டார். ஆனால், சிறிது நேரத் தில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில், தான் மது அருந்தவில்லை எனவும் தான் பயன்படுத்திய மருந்துகளால் ஏற்பட்ட திடீர் விளைவுகளே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon