விஜய்யின் ஐரோப்பிய படப்பிடிப்பு முடிந்தது

விஜய் நடிக்கும் 61ஆவது படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. ஐரோப்பாவில் நடந்து வந்த அப்படத் தின் படப்பிடிப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளாராம் இயக்குநர் அட்லி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின் றனர். கடந்த சில நாட்களாக ஐரோப்பா நாடுகளில் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சி களைப் படமாக்கி வந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடி வுக்கு வந்துள்ளது. இனி ஜூன் முதல் வாரத்தில் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சென் னையில் படமாக்க உள்ளனராம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ரீ தேனாண் டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100ஆவது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. விஜய் மூன்று தோற்றங்களில் நடிப்பதாக கேள்வி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வீராபுரம் 220’ படத்தில் இடம்பெறும் காட்சியில் மகேஷ், மேக்னா. படம்: டுவிட்டர்

21 Sep 2019

மணல் கொள்ளையைச் சாடும் ‘வீராபுரம்’

‘உலகக் கோப்பையை திருடும் கூட்டம்’ படத்தில் சந்திரன், சாட்னா.

21 Sep 2019

உலகக் கோப்பையைத் திருடுபவர்கள் கதை

படம்: ஊடகம்

21 Sep 2019

‘நாடோடிகள்-2’