விக்ரமைப் புகழும் ஸ்ரீ பிரியங்கா

தமிழ்த் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஸ்ரீபிரியங்காவும் ஒருவர். இவர் அச்சு அசல் தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரம் நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீபிரியங்கா. இதில் இவருக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். அது மட்டுமல்ல, அண்மைய சில தினங்களாகத் தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் விக்ரம் புராணத்தையே பாடிக்கொண்டிருக்கிறாராம். விக்ரமைப் போல் கலகலப்பான ஒரு கதாநாயகனைப் பார்க்கவே முடியாது என்பது பிரியங்கா அளிக்கும் நற்சான்றிதழ். “இந்தப் படத்தில் தமன்னாதான் கதாநாயகி. அவருடன் இணைந்து நடிப்பதை நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். விக்ரமும் தமன்னாவும் நன்றாகப் பேசிப் பழகுகிறார்கள்.

“இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. அதை விட விக்ரம் நடிக்கிறார் என்ற ஒரே காரணத் துக்காகவே இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதித்தேன். நான் அவரது ரசிகை. “முன்னணி நடிகர் என்பதால் முதல் நாள் அன்று படப்பிடிப்புக்குச் சென்றபோது படபடப்பாக இருந்தது. ஆனால் விக்ரமோ சர்வ சாதாரணமாக என்னை அணுகிப் பேசினார். அவ்வளவு பெரிய நடிகர் இந்தளவு இயல்பாக, அன்பாகப் பேசுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். “அவருடனான காட்சிகளில் இணைந்து நடித்தபோது, என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். நடிப்பு தொடர்பாக பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார். “படப்பிடிப்பு இல்லாத மற்ற நேரங்களில் அனைவரிடமும் கலகலப்பாகப் பழகினார். மிகவும் நல்ல மனிதர் என்பதைத் தெரிந்துகொண்டேன்,” என்கிறார் ஸ்ரீபிரியங்கா. தற்போது விக்ரம் மீதான பயம் அறவே நீங்கிவிட்டதாம். மாறாக அவரைப் பற்றி உயர்வாக நினைப்பதாகவே சொல்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!