திருமுருகன் குண்டர் சட்டத்தில் கைது: பிரமுகர்கள் கண்டனம்

சென்னை: இலங்கை இறுதிப் போரில் பலியான தமிழர்களுக்கு கடந்த 21ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடைபெற்ற நினை வேந்தல் நிகழ்வு தொடர்பாக மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை யானது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். திருமுருகனை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், திரைத்துரையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் திருமுருகனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரைப்பட இயக்குநர் ராஜமுருகன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், திருமுருகன் கைது நடவடிக்கையானது, கருத்து சுதந்திரத்துக்கும் அரசி யல் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயல் எனக் கூறி உள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தமது டுவிட்டர் பக்கத்தில், மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர் களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்து, அடக்குமுறையை ஏவி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என தமிழக அரசை சாடி உள்ளார். இந்திய அரசியல் சட்டம் உறுதி அளித்துள்ள பேச்சு உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையில் தமிழக அரசு செயல் படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இதன் பொருட்டு காவல் துறையைப் பயன்படுத்துவது அக்கிரமமான விபரீத நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon