நெடுமாறன்: உரிமைகளைப் பறிக்கிறது மத்திய அரசு

திருச்சி: தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தன்னெழுச்சி யாக போராட்டம் வெடிக்கும் என தமிழர் தேசிய முன்னணி தலை வர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவ்வாறு நடைபெறும் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வாய்ப்புண்டு எனவும் கூறினார். இந்தி திணிப்பு, நீட் தேர்வு ஆகியவை தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசியல் கட்சி யினரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் உரிமைகளை மத்திய பாஜ அரசு பறிப்பதாக பழ.நெடுமாறன் குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முற்படுவதாகச் சாடியுள்ள அவர், இத்தகைய போக்கை கண்டித்து திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். “அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தரை பரிந் துரை செய்யும் குழுவின் தலை வரை, தமிழக ஆளுநரே தன்னிச்சையாக நியமித்துள்ளார். இவ்வாறு தமிழகத்தின் உரிமை களைப் பறித்து, தனது விருப்பம் போல செயல்பட முயற்சிக்கிறது மத்திய அரசு. இத்தகைய போக் கும் செயல்பாடும் கண்டிக்கத் தக்கது.

“தமிழகத்தில் காலூன்ற பாஜக முயல்கிறது. ஆனால், மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார் கள். தமிழகத்தில் பொதுப் பிரச்சி னைகளுக்குக்கூட கட்சிகள் ஒன்றிணைந்து போராடாமல், கட்சி ஆதாயத்தையே பார்க்கின் றன,” என்றார் நெடுமாறன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் மதுக்கடை ஆகிய விவகாரங்களில் தன்னெழுச்சி யாக போராட்டங்கள் நடைபெற்றதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது மத்திய அரசு. இத்தகைய போக்கை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும். “தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலன்களையும் கட்சி நலனையும் மட்டுமே கவனத்தில் கொள்ளக்கூடாது. அத்தகைய போக்கைக் கைவிட்டு தமிழக நலனுக்காகச் செயல்பட வேண் டும். தமிழக தலைவர்கள் மத்தி யில் ஒற்றுமை இல்லாததே தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம். இந்நிலை மாற வேண் டும்,” என்றார் நெடுமாறன்.

நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்தி திணிப்பைக் கண்டித்தும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். திருச்சியில் உள்ள வருமான வரி அலுவலகத்தை முற்றுகை யிட்டு இந்தப் போராட்டம் நடை பெற உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon