ஈராக்கில் இரண்டு கார்குண்டுகள் வெடித்து 26 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரு கார்குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுமார் 95 பேர் காயம் அடைந்த்தாகவும் அதிகாரிகள் கூறினர். பாக்தாத்தில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு வெளியில் திங்கட்கிழமை இரவு முதல் குண்டு வெடித்ததாகவும் அந்தக் குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் 35 பேர் காயம் அடைந்ததாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ரமலான் மாதம் என்பதால் அந்த ஐஸ்கிரீம் கடைக்கு வெளியில் சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் கூடியிருந்த வேளையில் அங்கு கார்குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதக்குழு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. தானியக்கக் கருவியைப் பயன்படுத்தி காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச்  செய்திருப்பதுபோல் தெரிகிறது என்று ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அரசாங்கத் தலைமையகம் ஒன்றுக்கு அருகே இரண்டாவது கார்குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்ததாகவும் 35 பேர் காயம் அடைந்ததாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்தக் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’