சுடச் சுடச் செய்திகள்

கஞ்சிக் கடையில் கலாட்டா: இருவர் மீது குற்றச்சாட்டு

அப்பர் சிராங்கூன் சாலையில் உள்ள கஞ்சிக் கடையில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த தகராறு தொடர்பில் இரு சிங்கப்பூரர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது. 40 வயது பாங் பே பே கடையில் உள்ள கோப்பைகள், மேசைகள், நாற்காலிகள் போன் றவற்றை தூக்கி எறிந்து முறை கேடாக நடந்துகொண்டதாகவும் 46 வயது டான் சுங் மெங் பிறருடைய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அந்தக் கஞ்சிக் கடைக்கு சுமார் $5,000 மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தியதாக அவர் கள் மீது குற்றஞ்சாட்டப் பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் 40 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட இரு ஆடவர்களும் ஒரு மாதுவும் கைது செய்யப் பட்டதாக போலிஸ் நேற்று தெரி வித்தது. டான், பாங் ஆகிய இரு வருடனும் கைது செய்யப்பட்ட மற்றொருவரான ஆங் சிம் போ மீது இதுவரை குற்றஞ்சாட்டப் படவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட நான் காவது நபர் இன்னும் தேடப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. சாப்பிட்ட உணவுக்கான கட்டணம் அதிகமாக இருந்த தாகக் கூறி அவர்கள் தகராறு செய்தனர். உணவுக் கட்டணம் $28ஆக இருந்ததாகக் கூறப்பட்டது. கஞ்சி, வௌவால் மீன் போன்ற உணவு வகைகளை அவர்கள் வாங்கியதாக அறியப்படுகிறது. $5,000 பிணையில் விடுவிக் கப்பட்டுள்ள பாங்கை இரு வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon