சுடச் சுடச் செய்திகள்

‘சமூக ஒற்றுமையை வலுப்படுத்த உதவும் இஃப்தார்’

முஹம்மது ஃபைரோஸ்

ஒருவர் எந்தவொரு சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க முடிவது முக்கியம் என்றும் இதனைப் பின்பற்ற வகை செய்யும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்றும் பிரதமர் அலுவலக அமைச்சரும் மனிதவள, வெளி யுறவு இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ தெரி வித்துள்ளார். அவ்வகையில் சிங்கப்பூரில் பல இனங்கள், பல சமயங்கள் பரஸ்பர மரியாதையோடு அமைதி, நல்லிணக்கத்துடன் வாழ முடிவதாக அவர் கூறினார். பென்கூலன் பள்ளிவாசலில் முஸ்லிம் சமயத்தினருடன் நேற்று ‘இஃப்தார்’ எனப்படும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தமிழ் முரசிடம் இதனைத் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் முஸ்லிம் நண்பர்களுடன் பிற சமயங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள் வதன் மூலம் ஒருவருக்கொருவர் இடையே புரிந்துணர்வை வலுப்படுத்திக்கொள்ள முடிவ தாகத் திருவாட்டி டியோ கூறினார். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு விடுத்திருப்பது முஸ்லிம்களின் பெருந்தன்மையையும் அரவணைப் பையும் பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

நோன்பு திறப்பில் (இடமிருந்து வலம்) பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம் அப்துல் ஜலீல், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜோசஃபின் டியோ, முன்னாள் மூத்த துணை அமைச்சர் திரு சைனால் அபிடீன் ர‌ஷீத். படம்: திமத்தி டேவிட்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon