சுடச் சுடச் செய்திகள்

பொதுத் துறை கட்டுமானத் திட்டங்கள்

பொதுத் துறை கட்டுமானத் திட்டங்களில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து பொறுப்பேற்கும் அணுகுமுறையை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட் டுள்ளது. அமெரிக்காவிலும் ஹாங்காங் கிலும் கடைப்பிடிக்கப்படும் அணு குமுறையைப் போலவே சிங்கப் பூரிலும் கடைப்பிடிக்க அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து கட்டடக் கலை ஞர்கள் சங்கத்துக்கும் பொறியியல் ஆலோசகர்கள் சங்கத்துக்கும் இடையே முதல்முறையாக நடத் தப்படும் கூட்டு மாநாட்டில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கு மெரினா பே சேண்ட்ஸில் நேற்று நடை பெற்றது. இதில் 700 கட்டடக் கலைஞர்களும் பொறியாளர்களும் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் பெரும்பாலான கட்டுமானத் திட்ட ஒப்பந்தங்கள் தற்போது நடப்பில் இருக்கும் பணிச் செயல்முறையைப் பிரதி பலிக்கிறது. இதன்படி, சொத்து மேம் பாட்டாளர்களிடமிருந்து ஆலோ சகர்களிடமும் ஆலோசகர்களிட மிருந்து ஒப்பந்தக்காரர்களிடமும் இடர்பாடுகள் கைமாறுகின்றன. “மற்ற நாடுகள் வேறு மாதிரியான அணுகுமுறையை சோதனை செய்து வருகின்றன. உதாரணத்துக்கு, அமெரிக்காவில் ஒருங்கிணைந்த திட்ட அணுகு முறை நடப்பில் உள்ளது. இதன்படி, கட்டுமானத் திட்டங் களுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் பொறுப்பேற் கின்றன,” என்று அமைச்சர் வோங் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon