3 மலேசிய மாணவர்களிடம் பிரிட்டிஷ் போலிசார் விசாரணை

லண்டன்: மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மலேசிய மாணவர்கள் மூவர் மான்செஸ்டர் போலிசாரால் கைது செய்யப்பட்டு மூன்றரை மணி நேர விசாரணைக் குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். தாங்கள் தவறு எதுவும் செய்ய வில்லை என்பதால் தங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்று விடுவிக்கப்பட்ட அந்த மாணவர் கள் கூறினர். இந்த மாணவர்கள், திங்கட்கிழமை பிற்பகல் 5.40 மணியளவில் அவர்கள் தங்கி யிருந்த வீட்டில் போலிசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் லாங்சைட் என்ற இடத்திலுள்ள போலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் இரவு 9 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அந்த மாணவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப் படவில்லை. அந்த மாணவர்களை மலேசியத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து நிலைமையைக் கண்டறிந்தனர். மான்செஸ்டரிலுள்ள இசை அரங் கத்தில் அண்மையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர் பாக பிரிட்டிஷ் போலிசார் பலரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மான்செஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிதி உதவி வழங்க அந்நகரில் மீண்டும் பாப் இசை நிகழ்ச்சி படைக்கவிருப்பதாக பிரபல பாப் இசைப் பாடகி அரி யானா கிராண்டே கூறியுள்ளார்.