சுடச் சுடச் செய்திகள்

புதிய ஏவுகணை சோதனைக்கு ஆயத்தமாகும் வடகொரியா

சோல்: புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வருவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகளை பாதி வழியில் இடைமறித்து அழிக்கக்கூடிய தற்காப்பு முறையை அமெரிக்கா வெற்றிகரமாக சோதனை செய்துள்ள வேளையில் வடகொரியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எந்த நேரத்திலும் மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொள்ள வடகொரியா தயாராக இருப்பதாக வடகொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிடமிருந்து உத்தரவு வந்த பிறகு அந்த சோதனையை வடகொரியா மேற்கொள்ளவிருப்பதாக ரோடோங் சின்முன் நாளேடு தெரிவித்தது. அனைத்துலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவுக்கு எதிராக கூடுதல் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் முடிவு எடுக்கக்கூடும் என்று அமெரிக்காவுக்கான ஐநா தூதர் கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon