சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது ரஷ்யா தாக்குதல்

மாஸ்கோ: சிரியாவின் பல்மேரா நகரில் உள்ள ஐஎஸ் இலக்குகள் மீது ரஷ்ய கடற்படை நேற்று ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. மத்தியதரைக்கடல் பகுதி யிலிருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதாக ரஷ்யா கூறியது. இத்தாக்குதல் பற்றி அமெரிக்கா, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டதாக ரஷ்ய கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார். சிரியாவில் ஐஎஸ் போராளிகளைத் துடைத் தொழிப்பதில் கூட்டணிப் படைகளும் ஈடுபட்டுள்ளன.

Loading...
Load next