பேங்காக் ரயில் நிலையத்திற்கு அருகே வெடிகுண்டு

பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே பைப் வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரணை மேற் கொள்ளுமாறு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா உத்தரவிட்டுள்ளார். பேங்காக்கில் அண்மையில் நடந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் ரயில் நிலையத்திற்கு அருகே கைப்பற்றப்பட்ட வெடி குண்டுக் கும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அதிகாரி கள் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக பேங்காக் தகவல்கள் கூறின.

உளவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி சந்தேக நபர் களைக் கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தர விட்டிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். ரயில் நிலையத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பைப் வெடிகுண்டு 20 செ.மீ. நீளமுடையது என்று போலிசார் கூறினர். அந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றதையும் சிறிது நேரத்தில் அவர் திரும்பி வந்ததும் அந்த இருவரும் அங் கிருந்து சென்றதையும் பார்த்த தாக சாலை துப்புரவுப் பணியாளர் ஒருவர் கூறினார்.

ரயிலைத் தகர்க்கும் நோக்கத்தில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஃபின்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள 34 வயது சானா மர்ரின். படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

ஃபின்லாந்தில் உலகின் ஆக இளம் வயது பிரதமர்

பாலினத்திற்கு எதிரான வன்முறை போராட்டத்தில் அதிகம் நாட்டம் கொண்ட 26 வயது தென்னாப்பிரிக்க நங்கையான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தேர்வானார். படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

பிரபஞ்ச அழகியாக தேர்வான தென்னாப்பிரிக்க மங்கை