மராவியில் நீடிக்கும் சண்டை; 89 போராளிகள் பலி

மணிலா: பிலிப்பீன்சின் மராவி நகரில் போராளிகளுக்கும் அர சாங்கப் படையினருக்கும் இடையே கடந்த ஒரு வார காலமாக சண்டை நீடிக்கிறது. இந்த சண்டையில் போராளி கள் தரப்பில் 89 பேர் கொல்லப் பட்டதாக ராணுவம் தெரிவித் துள்ளது. மராவி நகருக்குள் ஊடுருவி யுள்ள துப்பாக்கிக்காரர்கள் தங்கள் தலைவர்களைக் காப்பாற்ற ராணுவத்தினரை எதிர்த்து கடுமை யாகச் சண்டையிட்டு வருவதுடன் அங்கு வசிக்கும் மக்களில் சிலரை பிணைபிடித்து வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிலிப்பீன்சின் தெற்குப் பகுதி யில் உள்ள மராவி நகரில் இன்னும் சில பகுதிகள் போராளி கள் வசம் உள்ளன. அந்நகரின் பெரும்பாலான பகுதிகளை ராணுவம் கைப் பற்றியுள்ள நிலையில் எஞ்சிய பகுதியை மீட்க பிலிப்பீன்ஸ் படையினர் கடுமையாகச் சண்டை யிட்டு வருகின்றனர். போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் நேற்று காலை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ராணுவம் கூறியது.

மராவி நகரில் போராளிகள் வசம் உள்ள பகுதியில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்களில் சிறுவர்கள் உட்பட 20 பேரை அரசாங்கப் படையினர் காப்பாற்றினர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்