மேலூர்: 56 ஆண்டுகளுக்குப் பின் ஜல்லிக்கட்டு

மதுரை: ஏறத்தாழ 56 ஆண்டுகளுக்குப் பின்னர் மேலூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. மேலூர் அருகேயுள்ள ஆட்டுகுளம் கிராமத்தில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சு விரட்டு நடத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அங்குள்ள இரு கோவில்களின் முன்பு கூடிய கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளும் கணிசமான எண்ணிக்கையில் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியின் போது இருவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.