தமிழக மக்கள் துருப்பிடித்துக் கிடக்கின்றனர்: பாரதிராஜா

சென்னை: இனம், மொழி, உணர்வு உள்ளிட்ட விஷயங்களில் தமிழக மக்கள் துருப்பிடித்துக் கிடப்பதாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக திரைப்பட இயக்குநர் கள் வெற்றிமாறன், அமீர், ராம் உள்ளிட்டோருடன் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசிய பாரதிராஜா, தமிழகத்தில் மட்டுமே தூங்கிக்கொண்டிருப்பவர்களை எல்லாம் தட்டியெழுப்பி அரசியலுக்கு வரவழைக்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாகக்  கூறினார். “எந்த இடமாக இருந்தாலும் மண்ணுக்குச் சொந்தக்காரன்தான் தலைவனாக இருக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த நால்வரும் கொலை செய் தார்களா? கொள்ளை அடித்தார் களா? அவர்கள் மீது ஏன் குண் டர் சட்டம் பாய வேண்டும்? மத் திய, மாநில அரசை விமர்சிக்கக் கூடாதா?” என்று பல்வேறு கேள் விகளை அடுக்கினார் பாரதிராஜா.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை விடுதலை செய்யாவிட்டால் தமிழர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழகத்தில்தான், கூத்தாடிகள் நாடாள முடியுமா என்ற ஒற்றை சொல் தடம் புரண்டுவிட்டதாகக் குறிப்பிட்டார். “தமிழன் மட்டும்தான் வேறு எந்த ஊரிலும் பதவி வகிக்க முடி வதில்லை. மற்ற யார் வேண்டுமா னாலும் வரலாம். போகலாம் என்ற நிலை இங்கேதான் இருக்கிறது,” என்றார் பாரதிராஜா. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாகப் பேசப்படுவதாக பல்வேறு ஆரூடங்கள் கூறப்படுவதை சுட்டிக்காட்டியே பாரதிராஜா இந்தளவு ஆவேசமாகப் பேசிய தாகக் கருதப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon