சிங்கப்பூர் குழு நிர்வாகியிடம் விசாரணை

சிங்கப்பூர் காற்பந்துக் குழு அண்மையில் அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்றபோது ஒழுங்குவிதிகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, குழுவின் நிர்வாகி ஃபரெஹான் ஹுசைனிடம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏஎஸ்) விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது என ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி கூறுகிறது. இதன் தொடர்பில் சிங்கப்பூர் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையமான ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்பிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து விசாரிக்கும்படி ‘ஸ்போர்ட்எஸ்ஜி’, சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தைக் கேட்டுக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்த ஒழுங்கு விதிமீறல் புகார் குறித்து விசாரிக்க ‘டான் ராஜா & சியா’ சட்ட நிறுவனத்தின் பங்காளிகளில் ஒருவரான வழக்கறிஞர் சந்திரமோகன் கே நாயர் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை எஃப்ஏஎஸ் நியமித்து இருக்கிறது. முன்னதாக, சில எஃப்ஏஎஸ் பணியாளர்களும் அக்குழுவிடம் வாக்குமூலம் அளித்ததாக நம்பப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது