சுடச் சுடச் செய்திகள்

‘உட்ஸ் உறக்கத்தில் இருந்தார்’

நியூயார்க்: உலகின் முன்னாள் முதல்நிலை கோல்ஃப் வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ், 41, மது அருந்திவிட்டு காரோட்டிய தாகச் சில நாட்களுக்குமுன் கைது செய்யப்பட்டார். ஆயினும், சட்டரீதியான நட வடிக்கைக்கு ஒத்துழைப்புத் தரு வதாக உறுதியளித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். “நான் மது அருந்திவிட்டு காரோட்டவில்லை. நான் எடுத்துக் கொண்ட மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்,” என்று அறிக்கை மூலம் உட்ஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சாலையின் வலத்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் இயக்கநிலையில் இருந்த தாகவும் அதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி உட்ஸ் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் அவரை எழுப்பியபோது அவர் மிக மிக மெதுவாக, தெளிவின்றிப் பேசிய தாகவும் போலிஸ் கூறியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon