லெஸ்டரைவிட்டு விலக ரியாத் மாரெஸ் விருப்பம்

லெஸ்டர்: கடந்த 2015-16 பருவத்தில் லெஸ்டர் சிட்டி காற் பந்துக் குழு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களில் அல்ஜீரிய வீரர் ரியாத் மாரெசும் ஒருவர். லீக் பட்டம் வென்றபின் மேலும் ஓராண்டுக்கு லெஸ்டருக்காக விளையாட ஒத்துக்கொண்டதாகக் கூறிய 26 வயது மாரெஸ், இப் போது அக்குழுவைவிட்டு வெளி யேற விரும்புகிறார். “லெஸ்டர் சிட்டி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இருந்தாலும் நான் நேர்மையாக, வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன். நான் இங்கிருந்து புறப் பட இதுதான் சரியான நேரம் என்பதைக் குழு நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன்,” என்று அறிக்கை மூலம் மாரெஸ் தெரி வித்துள்ளார்.

கடந்த நான்கு பருவங்களாக லெஸ்டருக்காக விளையாடியது சிறப்பான தருணம் என்று குறிப்பிட்ட அவர், இன்னும் பலவற்றைச் சாதிக்க தான் இலக்கு கொண் டுள்ளதாகவும் சொன்னார். இதற்கிடையே, செல்சி குழு வின் கோல்காப்பாளர்களில் ஒரு வரான போஸ்னியா நாட்டைச் சேர்ந்த அஸ்மீர் பெகோவிச், 29, போர்ன்மத் குழுவுடன் நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். செல்சியிடமிருந்து அவரை பத்து மில்லியன் பவுண்டு (S$17 மி.) விலை கொடுத்து போர்ன்மத் வாங்கி இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மெர்செடிஸ் அணியின் ஓட்டுநருமான லுவிஸ் ஹேமில்டன். படம்: ஊடகம்

21 Sep 2019

‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு ஹேமில்டன் குறி

ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்ட பதின்மவயது வீரர் மேசன் கிரீன்வுட் (நடுவில்).
அஸ்தானாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் தம்மை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் இவர் அனுப்பினார். இதன்மூலம் யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2019

அஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்

எதேச்சை பாணி 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். படம்: வினே‌ஷ் டுவிட்டர்

21 Sep 2019

வினேஷ் போகத் தங்கம் வெல்ல முனைப்பு