சென்னை துணிக்கடையில் 10 மணி நேரம் எரிந்த தீ

சிங்கப்பூரர்களுக்குப் மிகவும் பழக்க மான, நன்கு பிரபலமான சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள ‘தி சென்னை சில்க்ஸ்’ துணிக் கடையில் நேற்றுக் காலை மூண்ட தீயைக் கட்டுப்படுத்த சென்னை நகர தீயணைப்புத் துறை தவறிவிட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டிவிட்டதாகவும் கடையில் பெரும் சேதம் ஏற்பட்டுவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தத் துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் நேற்று அதிகாலை 4 மணியள வில் தீ மூண்டது. தீயணைப்புத் துறை விரைந்து வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. அதனால் தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது.

சுமார் 10 மணி நேரமாக தீ எரிந்ததால் கட்டடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டன. கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற ஏழு தளங்களுக்கும் பரவியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. தியாகராய நகரில் கட்டடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழு வீச்சில் செயல்பட இயலாமல் தீய ணைப்புத்துறையினர் திணறினர்.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். எரிவாயுத்தோம்பு கள் அனைத்தும் உடனடியாக அகற்றப் பட்டன. இதனிடையே, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், “மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை. கட்டடத் தின் உள்ளே இருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தியாகராய நகர் உஸ்மான் சாலை கடை தீயை அணைக்கப் படாதபாடுபடும் தீயணைப்புத் துறையினர். படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்