மத்திய அரசின் தடை: உடன்பாடு இல்லை என்கிறார் தம்பிதுரை

புதுடெல்லி: மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய பதிலைச் சொல்லும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். டெல்லியில் செய்தியார்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவில் அதிமுகவுக்கு உடன்பாடு கிடையாது என்றார். “அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் என்ற முறையில் நான் சொல்கிறேன். தமிழக அரசு உரிய பதிலை சொல்லும். சென்னை ஐஐடியில் மாணவர் மீது நடந்த தாக்குதல் தவறு,” என்றும் தம்பிதுரை மேலும் தெரிவித்தார்.