தீ விபத்து: சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் கண்ணீர்

சென்னை: திடீர் தீ விபத்தால் தரைமட்டமாகிவிட்ட சென்னை சில்க்ஸ் கடையின் ஊழியர்கள் தங்களுக்கு இம்மாத ஊதியம் வழங்கப்படுமா? எனத் தெரியாமல் தவிப்பில் உள்ளனர். மேலும் மாதந்தோறும் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணமும் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கருதி கண் ணீர் சிந்தி வருகின்றனர். சென்னையின் முக்கிய அடை யாளங்களில் ஒன்றாக விளங்கிய சென்னை சில்க்ஸ் கடை, திடீர் தீ விபத்தின் காரணமாக உருக் குலைந்து போயுள்ளது. நேற்று இரவு வரை அக்கடையில் மூண்ட தீயை அணைக்க தீயணைப்புத் துறையின் போராடினர். இந்நிலையில், தீ விபத்தால் கடை நிர்வாகத்துக்கு பெரிய அளவில் நஷ்டமும், தொழில் பாதிப்பும் ஏற்படலாம் எனத் தெரி கிறது.

இதனால் அக்கடையின் ஊழியர்கள் பரிதவித்துப் போயுள்ளனர். கடை நிர்வாகம் கடும் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளதால், இம்மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஒருவேளை ஊதியம் கிடைக்காது போனாலோ, சம்பள தேதி தள்ளிப் போடப்பட்டாலோ என்ன செய்வது என புரியாமல், தெரியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். மேலும் சேமிப்புகள் ஏதும் இல்லாதவர்கள் இம்மாதம் வீட்டு வாடகை, மின்கட்டணம் உள் ளிட்ட தேவைகளை எப்படிச் சமா ளிப்பது எனக் கையைப் பிசைந்து கொண்டுள்ளனர். தற்போது கடை முழுவதும் எரிந்து விட்டதால் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள் ளது. இவர்களுக்கு சென்னை சில்க்ஸ் கடையின் மற்ற கிளை களில் பணி வழங்கப்பட்டாலும் குழந்தைகள் சென்னையில் படிக்கும் நிலையில் ஆண்கள் செல்லலாம்.