சகாயம் அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் நிகழ்ந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தமிழக அரசிடம் அளித்த விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரைப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சகாயம் தனது அறிக்கையை அளித்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அதன் விவரங்களை வெளியிட அரசு தயங்குவதால் பல்வேறு உண்மைகள் மூடி மறைக்கப்படுமோ எனும் சந்தேகம் எழுவதாக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் சண்முகம் கூறினார். எனவேதான் ஆர்ப்பாட்டம் நடைபெறுவ தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். படம்: தகவல் ஊடகம்

Loading...
Load next