முற்றுகை போராட்டம்: பழ.நெடுமாறன் உட்பட 450 பேர் கைது

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழ.நெடுமாறன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது 450 பேர் திருச்சி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்துக்கு முன்னர் நடைபெற்ற ஊர்வலத்தை தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், இந்தி மொழித் திணிப்பைக் கைவிட வேண்டும், இறைச்சிக்காக மாடு களை விற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல் வேறு தரப்பினரும் மத்திய அரசி டம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இக் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக அனைத்துத் தரப்பினரையும் இணைத்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் நெடுமாறன் தலைமையில் திருச்சி யில் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், விவசாய சங்கத் தினர் திருச்சியிலுள்ள வருமான வரித் துறை மண்டல அலுவல கத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டனர். எனினும் இடையிலேயே போலிசாரால் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்படவே, அங்கு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதையடுத்து பழ.நெடுமாறன், தமிழக வாழ்வு ரிமைக் கட்சித் தலைவர் வேல்முரு கன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தின் தலைவர் மணியரசன், அய்யாக்கண்ணு, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பாண்டியன், 20 பெண் கள் உட்பட 450 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!