உரிமம் இல்லாத நாயை வளர்த்து, கைவிட்டவருக்கு அபராதம்

உரிமமில்லா நாய் ஒன்றை வளர்த்து வந்து பிறகு அதைக் கைவிட்ட 32 வயது ஆடவருக்கு 4,800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாம் வளர்த்து வந்த நாயை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உபி வட்டாரத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் விட்டுச் சென்றதை ஜோசஃப் டாங் இயூ லியாங் ஒப்புக்கொண்டார். 2015ஆம் ஆண்டில் அந்த நாயைத் தமது முன்னாள் முதலாளியிடமிருந்து டாங் பெற்றுக்கொண்டார். அந்த நாயை வளர்க்க அவர் உரிமம் பெறவில்லை என்று வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கூறியது.

Loading...
Load next