106 சந்தேக நபர்கள் கைது

கடன் முதலைகளுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 68 ஆண்களும் 38 பெண்களும் அடங்குவர். அவர்கள் 17 வயதிலிருந்து 83 வயதுக்கு உட்பட்டவர்கள். கடன் முதலை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் நிறைவு பெற்ற மூன்று நாள் அதிரடி நடவடிக்கையை மத்திய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் போலிஸ் படையின் ஆறு நிலப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் நடத்தினர்.

Loading...
Load next