மூதாட்டி மீது 169 மோசடி குற்றச்சாட்டுகள்

67 வயது மூதாட்டி ஒருவர் மீது 169 மோசடி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. தட்டுகளைக் கழுவும் பணி செய்பவரான டான் ஹுவீ ஙோ (படம்), திரு லீ குவான் இயூவுக்குப் பணம் தேவைப்படுகிறது என்று பொய் சொல்லி 72 வயது டான் சோய் கியோங்கை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது. அவர் குறிப்பிட்ட திரு லீ குவான் இயூ சிங்கப்பூரின் முதல் பிரதமரா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றத்தை டான் ஹுவீ ஙோ 1999ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அவர் 1999ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திரு டானை ஏமாற்றி அவரது மத்திய சேமநிதி சேமிப்புக் கணக்கிலிருந்து $53,161.64 எடுக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து டான் ஹுவீ ஙோவுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 69 வயது திருவாட்டி பூ சூக் ஹியாங்கிடம் திரு டான் மாதந்தோறும் குறைந்தது 500 வெள்ளி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. திருவாட்டி பூ கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரில் டான் ஹுவீ ஙோவுக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். அவர் 20,000 வெள்ளிக்குப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon