சுடச் சுடச் செய்திகள்

ஃபேஸ்புக் பதிவு குறித்து பார்கவாவிடம் விசாரணை

ஜாக் நியோ தயாரிக்கும் திரைப் படத்தின் தேர்வுச்சுற்றின்போது இனவாதத்திற்கு இலக்கானதாக ஃபேஸ்புக்கில் கருத்து பதிவேற்றிய சிங்கப்பூர் இந்திய நடிகர் போலிசாரால் விசாரிக்கப்பட்டுள் ளார். போலிசார் தன்னை நேற்று விசாரணைக்கு அழைத்ததாகவும் தனக்கு எதிராகப் போலிசாரிடம் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் ஷ்ரே பார்கவா கூறினார். ஃபேஸ்புக்கில் அந்தக் கருத்தைப் பதிவேற்றம் செய்ததன் நோக்கம் பற்றி தம்மிடம் விசாரிக்கப்பட்டதாக 22 வயது பார்கவா தெரிவித்தார். ‚‘ஆ பாய்ஸ் டு மென் 4’ திரைப்படத்தின் தேர்வுச்சுற்றுக்குச் சென்றபோது, ‚முழுமையான இந்திய ஆடவரைப்போல், இந்தியப் பேச்சு பாணியில் இந்திய இயல்புகளை மிகைப்படுத்தி வேடிக்கையான முறையில் நடித்துக் காட்டுமாறு தம்மிடம் கேட்டுக் கொள்ளப்பட்டபோது தம்மை அவமதிப்பதைப் போலத் தோன்றியதாக இம்மாதம் 27ம் தேதி பார்காவா ஃபேஸ்புக்கில் கருத்துரைத்தார்.

இனவாதத்துக்கு இலக்கானதாக ஃபேஸ்புக்கில் கருத்து பதிவேற்றிய ஷ்ரே பார்கவாவிடம் போலிசார் விசாரணை நடத்தினர். பார்கவா குறைகூறியதை அடுத்து இணையவாசிகள் சிலர் அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக அறியப்படுகிறது. படம்: ஃபேஸ்புக்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon